தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

Mahendran

வியாழன், 1 மே 2025 (18:20 IST)
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட மோர் பந்தலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றிய நிலையில், அதன் அருகில் திமுகவின் மோர் பந்தல் இருந்ததால், "இந்த மோர் பந்தலை ஏன் அகற்றவில்லை?" என தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கோடை காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மோர் பந்தல் வைக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து, அனுமதி இல்லாமல் பந்தல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் அந்த மோர் பந்தலை அகற்றினர். இதற்கு தவெக கட்சி தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர்.
 
அதன் அருகிலேயே திமுக சார்பிலும் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை ஏன் அகற்றவில்லை என்ற கேள்வியை தொண்டர்கள் எழுப்பினர். இதனால் மாநகராட்சி ஊழியர்கள் பதில் சொல்ல முடியாமல் இருந்தனர்.
 
இதனையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்