ராம்குமாரை காவல்துறை கைது செய்ய முயன்றபோது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால் ராம்குமார் கழுத்தை அறுக்கவில்லை காவல்துறையுடன் வந்தவர்கள் தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தார்கள் என ராம்குமாரின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் குற்றாம் சாட்டினர்.
அவரது புகாரில், எனது மகன் கைது செய்யப்பட்டபோது எனது வீட்டிற்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் உனது மகன் பின்புறத்தில் கழுத்தை அறுத்து கொண்டு கிடக்கிறான் என்று கூறினார்கள். நாங்கள் சென்று பார்த்தபோது ராம்குமார் கழுத்து அறுபட்டு கிடந்தான் அவன் அருகில் நின்றிருந்த ஒரு காவலர் கையில் ரத்தம் படிந்திருந்தது.
மேலும் தனது மகன் ராம்குமாரை கொலை செய்ய முயற்சி செய்த காவல் ஆய்வாளர் பாலமுருகன் மீதும், அவருடன் வந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.