இந்த நிலையில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு தற்காலிக ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்காலிகமாக பேருந்துகளை ஓட்டுவதற்கும் நடத்தினர் பணிக்கும் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து ஏராளமானோர் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளை விண்ணப்பத்துடன் அணுகி வருவதாக கூறப்படுகிறது.