ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டிய அதிமுக பிரமுகர்

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2016 (21:10 IST)
தஞ்சையில் அதிமுக பிரமுகர் ஒருவர் ரூ.2 லட்சம் செலவில் மறைந்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டியுள்ளார்.


 

 
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கறையில் உள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் நேற்று முன் தினம் வரை வந்து சென்றனர்.
 
இந்த நிலையில் தஞ்சையில் அதிமுக பிரமுகர் ஒருவர் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி உள்ளார். தஞ்சை மேல வீதியை சேர்ந்த சாமிநாதன் என்பவர் 18-வது வார்டு முன்னாள் அதிமுக கவுன்சிலராக இருந்தவர்.
 
மேல வீதி கொங்கணேஸ்வரர் கோயில் அருகே ரூ.2 லட்சம் செலவில் மறைந்த ஜெயலலிதாவுகு கோயில் கட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
என்னை போன்று சாதாரண தொண்டர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர். அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. கடந்த 7ஆம் தேதி அவருக்கு கோயில் கட்டும் பணியை தொடங்கினேன். விரைவில் 2 அடியில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை வைக்கப்படும்.
 
இந்த கோவிலை தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வைத்திலிங்கம் எம்.பி. ஒரிரு நாட்களில் திறந்து வைக்க உள்ளார், என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்