பிரதமர் மோடி நாட்டை தவறாக வழி நடத்துகிறார். தெலுங்கானா எம்.எல்.ஏ கவிதா..!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (21:11 IST)
பிரதமர் மோடி நாட்டை தவறாக வழி நடத்துகிறார் என்றும் இளைஞர்கள் அனைவரும் பிரதமரின் பேச்சை கேட்டு அவர் எத்தனை பொய் சொல்கிறார் என்று எண்ணிக் கொண்டே வாருங்கள் என்றும் தெலுங்கானா மாநில எம்எல்ஏ கவிதா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா எம்எல்ஏ கவிதா பாஜக மீண்டும் வெற்றி பெறாது என்று நம்புகிறேன் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றும் பாஜக வீட்டுக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்றும் புதிய முகத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்றத்தில் நேற்று ஒன்றரை மணி நேரம் பேசிய பிரதமர் அதானி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டை பிரதமர் மோடி தவறாக வழிநடத்துகிறார் என்றும் பிரதமரின் பேச்சைக் கேட்டு அவர் எத்தனை பொய் சொல்லுகிறார் என இளைஞர்கள் எண்ணிக்கொண்டே வாருங்கள் என்றும் அவர் பேசினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்