மது விற்பனை ரூ.183 கோடி! ஒரே நாளில் கல்லா கட்டிய டாஸ்மாக்

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (10:13 IST)
தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று ஒரு நாளில் மட்டும் டாஸ்மாக் விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்றைக்கு தேவையான மதுவை வாங்குவதற்காக நேற்றே மதுப்பிரியர்கள் மதுக்கடைகளில் குவிந்துள்ளனர்.

இதனால் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனையின் மொத்த வருவாய் ரூ.183 கோடியாக உயர்ந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.42.1 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.3 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் ரூ.40 கோடி ரூபாய்க்கும் நேற்று மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்