500,1000 நோட்டுகளுக்கு சரக்கு கொடுக்க வேண்டும் - கோரிக்கை வைப்பது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (09:53 IST)
குடிமகன்கள் தங்கள் கையில் உள்ள 500 மற்றும் 1000 நோட்டுகளுக்கு, டாஸ்மாக்கில் மது பானங்கள் கொடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மனு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதேபோல், புதிய 100, 500, 2000 நோட்டுகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள், பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளாலம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கடந்த 8ம் தேதி, இரவு அறிவித்தது முதல், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாங்கப்படவில்லை. இதனால், சரக்கு பட்டில்கள் வாங்கி அருந்த முடியாமல், பல குடிமகன்கள் சிரமப்பட்டனர். பல இடங்களில் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.
 
குடிமகன்களுக்கு எளிய வகையில் மது கிடைக்க வழிவகை செய்யுமாறு அரசிற்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தது.
 
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு முதல்வர் தனிப்பிரிவு, டாஸ்மாக் மேலாளரை சந்தித்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் 500,1000 நோட்டுக்களை பெற்றுகொண்டு, அரசு மதுபானங்களை கொடுத்திட வேண்டி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட மனு கொடுக்க இருப்பதாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்துள்ளது.

 
அடுத்த கட்டுரையில்