நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: அதிரடி உத்தரவு..!

வியாழன், 21 செப்டம்பர் 2023 (16:08 IST)
விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளதை அடுத்து நாளை முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவதும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்று அதன்பின்  சிலைகளை கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபரீதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் மற்றும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை நாளை அதாவது செப்டம்பர் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்