நடுசாலையில் படுத்துக்கொண்டு விவசாயிகள் பஸ் மறியல்.. தஞ்சாவூரில் பரபரப்பு..!

திங்கள், 25 செப்டம்பர் 2023 (10:12 IST)
காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் திடீரென நடு சாலையில் படுத்துக்கொண்டு பஸ் மறியல் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநில அரசின் பிடிவாதம் காரணமாக காவிரியில் இருந்து போதுமான தண்ணீர் திறக்கப்படாததால் தஞ்சை பகுதியில் உள்ள நெற்பயர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறக்க கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர். கருகும் நெற்பயிர்களை காப்பாற்றக்கோரி விவசாயிகள் மறியல் செய்து வருவதோடு, காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்துள்ளனர். 
 
நடுசாலையில் படுத்துக்கொண்டு விவசாயிகள் பஸ் மறியலில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்