காவிரி நதிநீர் விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் - ஹல்தர் சந்திப்பு

திங்கள், 18 செப்டம்பர் 2023 (16:51 IST)
காவிரி நதிநீர் விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 
காவிரி ஆணைய தலைவர் ஹல்தர், ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா உள்ளிட்டோர் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரை இன்று சந்திக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
காவிரி ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை வழங்கி விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்