கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர வேண்டுமா? – விண்ணப்பிப்பது எப்படி?

திங்கள், 12 செப்டம்பர் 2022 (09:55 IST)
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் அனைத்து விதமான மருத்துவ படிப்புகளிலும் சேர நீட் தேர்வு அவசியமாக உள்ளது. கால்நடை மருத்துவ படிப்புகளில் சேரவும் நீட் தகுதியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்புவோர் adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்