வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை! – தமிழகத்தில் கனமழை வாய்ப்பு!

வெள்ளி, 21 மே 2021 (13:26 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 23ம் தேதி அந்தமான் அருகே தெற்கு கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 5 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்