சென்னையில் கொரோனா; 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதி!

வெள்ளி, 21 மே 2021 (11:14 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உள்ளன. சென்னை மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனி கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் ஒரு தெருவில் 6 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு இருந்தால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை சென்னையில் 2,600 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது 6,500 தெருக்களில் 3 பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்