ரெண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு யாரும் வரல?? – சுகாதாரத்துறை செயலர் தகவல்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (08:24 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஜனவரி முதலாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டினாலும் இரண்டாவது அலை தீவிரமடைய தொடங்கிய சமயத்தில் பலர் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் பலர் காலம் கடந்தும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் மொத்தமாக இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 9 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்