இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றவையாக உள்ளது குறித்து சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி தமிழகம் முழுவதும் 2,13,80,112 குடும்ப அட்டைகள் உள்ளன. அனைத்து மக்களுக்கும் ரேஷன் மூலம் தரமான அரிசியை வழங்க அரசு உறுதியேற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அரிசி ஆலைகளில் ”கலர் ஷேடிங்” என்ற அரிசி தரம் பிரிக்கும் இயந்திரத்தை நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் மக்களுக்கு தரமான அரிசி கிடைக்கும் என கூறியுள்ளார்.