தமிழக ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய பொறுப்பு ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பொறுப்பை மஹாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து அடுத்த ஆளுநர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. குஜராத்தின் முதல்வராக இருந்த ஆனந்தி பென் படேலை தமிழக ஆளுநராக நியமிக்க முயற்சிகள் நடந்து வந்ததாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் தற்போது மஹாராஷ்டிர ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.