கொரோனா பாதிப்பில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 24 மாவட்டங்களை, ஆரஞ்சு மண்டலங்களாகவும் ஒரே ஒரு பச்சை மண்டலமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலம் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
சிகப்பு மண்டலங்கள்: சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம்
ஆரஞ்சு மண்டலங்கள்: தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துகுடி, திருச்சி, திருப்பத்தூர், குமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தர்மபுரி
இவ்வாறு தமிழக மாவட்டங்களை சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களாக பிரித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிகப்பு மண்டல மாவட்டங்களுக்கு கண்டிப்பாக ஊரடங்கு உத்தரவு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது