சிவப்பு, மஞ்சள், பச்சை... கொரோனா பாதித்த பகுதிகளை பிரிக்க திட்டம்

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (15:19 IST)
கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, மஞ்சள், பச்சை என தனிமண்டலங்களாக  மத்திய அரசு பிரிக்க திட்டமிட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 169 லிருந்து 199 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 478 லிருந்து 504 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 834 பேரும், டெல்லியில் 720 பேரும், ராஜஸ்தானில் 463 பேரும், தெலுங்கானாவில் 440 பேரும், கேரளாவில் 357 பேரும், ஆந்திராவில் 348 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, மஞ்சள், பச்சை என தனிமண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
 
சிவப்பு மண்டல பகுதிகளில் ஏப்ரல் 30 வரை போக்குவரத்து அனுமதி இல்லை 
மஞ்சள் மண்டல பகுதிகளில் கட்டுபாடுடன் போக்குவரத்துகள் இருக்கும் 
பச்சை மண்டல பகுதிகளில் தடையின்றி போக்குவரத்து தொடரும் 
 
இந்த மண்டலங்களி எந்தெந்த பகுதிகள் வரும் என்பதை விரைவில் மத்திய அரசு தெரிவிக்கும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்