தற்போது தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க ஸ்மார்ட் ரேசன் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. தவிரவும் வாங்கும் பொருட்கள் குறித்த விவரங்கள் பயனாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இந்நிலையில் உணவு பொருள் வழங்கலை மேலும் மேம்படுத்த பயோமெட்ரிக் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்த பிறகு ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் அட்டைதாரர் கைரேகை வைத்து பயோ மெட்ரிக்கில் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். கைரேகை பதிவு வேலை செய்யாவிட்டால் பயனாளர் செல்போனுக்கு ஒடிபி எண் அனுப்பப்படும். அதை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.