தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தபோது தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன்’ மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது நியாயமானது. ஸ்டெர்லைட் ஆலை அதிகக் கழிவுகளை வெளியேற்றி வந்ததாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது,’ என வாதிட்டார்.