தனி மாநகராட்சியானது தாம்பரம்… தமிழக அரசு அவசர சட்டம்!

வியாழன், 4 நவம்பர் 2021 (17:29 IST)
தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து தாம்பரத்தை தனி மாநகராட்சியாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது தாம்பரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்