மேலும் 4 மாநகராட்சிகள்: அரசிதழில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (19:15 IST)
தமிழகத்தில் உள்ள ஒருசில நகராட்சிகள் மாநகராட்சிகள் ஆக தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன என்பதும் சமீபத்தில்கூட தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர் ஆகிய நான்கு நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர் ஆகியவை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசர சட்டம் குறித்த அறிவிப்பு அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதனை அடுத்து தமிழக அரசுக்கு அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்