தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் இதுதான்! – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (15:05 IST)
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசம் குறித்த அறிவிப்பை அமைச்சர் கருப்பணன் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் எதிர்வரும் நவம்பர் 14 அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான கால நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது காற்று மாசு காரணமாக பல மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதையே தடை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அரசு அனுமதித்த நேரத்திற்குள்ளாக மக்கள் பட்டாசு வெடித்து பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்