விமான பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (11:41 IST)
இந்தியா முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் விமான பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நடவடிக்கையாக ஐந்தாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில் தேசிய அளவிலான விமான போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம் என தமிழக அரசு ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. அவ்வாறு இ-பாஸ் பெறாமல் தமிழகத்திற்கு விமானம் மூலம் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். இந்நிலையில் விமான பயணத்திற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் கண்டிப்பாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

வணிக ரீதியான செயல்பாடுகளுக்காக இரண்டு நாட்களுக்குள் வெளி மாநிலங்கள் சென்று திரும்புபவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்,

வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும்.

குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விமானம் மூலம் வருபவர்களுக்கு கண்டிப்பாக பிசிஆர் சோதனை செய்யப்படும்

இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்