நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் சிக்கிய அரிக்கொம்பன்! – கம்பம் மக்கள் நிம்மதி!

திங்கள், 5 ஜூன் 2023 (08:21 IST)
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றி வந்த ஒற்றை காட்டுயானை அரிக்கொம்பன் வனத்துறையிடம் பிடிபட்டது.



கடந்த சில ஆண்டுகளாக கேரளாவை உலுக்கி வந்த ஒற்றை காட்டுயானை அரிக்கொம்பன். அங்குள்ள பல விளை நிலங்களை சேதப்படுத்தி, 8 பேரை கொன்ற அரிக்கொம்பனை பிடித்து கேரள வனத்துறையினர் காட்டில் விட்ட நிலையில், அது அங்கிருந்து தேனி கம்பம் பகுதிகளில் புகுந்து கடந்த ஒரு வார காலமாக அட்டகாசம் செய்து வந்தது.

அரிக்கொம்பன் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அரிக்கொம்பனை பிடிக்க தமிழக வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்காக அரிசிராஜா என்ற முத்து உள்ளிட்ட 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில் சண்முகா அணை பகுதியில் முகாமிட்டிருந்த அரிக்கொம்பனை கண்டறிந்த வனத்துறையினர் 4 மயக்க ஊசிகளை செலுத்தி அதை பிடித்துள்ளனர். கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி அரிக்கொம்பனை வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர். ஆனால் அதை எந்த பகுதியில் விட போகின்றனர் என்ற தகவல்கள் தெரிய வரவில்லை.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்