வருகிறது அதீத கனமழை; தமிழகத்தில் ரெட் அலர்ட்! – வானிலை ஆய்வு மையம்!

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (12:37 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள சூழலில் தமிழக மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்டு காற்றழுத்த தாழ்வு நிலையால் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. முன்னதாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உண்டான மழையால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் வேலூரில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்