கர்நாடகாவில் கார் கவிழ்ந்து விபத்து: 10 தமிழக பக்தர்கள் பரிதாப பலி!
வெள்ளி, 6 மார்ச் 2020 (09:19 IST)
கர்நாடகாவுக்கு சாமி தரிசனம் செய்து வர சென்ற தமிழக பக்தர்கள் விபத்தில் இறந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திலிருந்து பக்தர்கள் சிலர் கர்நாடகாவில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய காரில் சென்றுள்ளனர். தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருக்கும்போது தும்கூர் பகுதி அருகே நிலைதடுமாறி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்களுக்கு ஏற்பட்ட இந்த பரிதாப நிலை பலரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.