எனக்கு மீனும் பிடிக்கும் மீம்ஸும் பிடிக்கும்: ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன்

வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (15:14 IST)
எனக்கு மீனும் பிடிக்கும் மீம்ஸும் பிடிக்கும் என புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 
 
சமீபத்தில் மீன் உணவை சைவமாக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். 
 
இது குறித்து அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது மீன் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் மீனில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை சைவ உணவிடம் சேர்க்க வேண்டும் என்று சொன்னேன். 
 
மேற்குவங்கத்தில் உள்ளவர்கள் மீனை கடல் பூக்கள் என்று கூறி அதை சைவ உணவுடன் சேர்த்துள்ளனர். எனவே மீனை சாப்பிடுவது உங்கள் விருப்பம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று தெரிவித்தார் 
 
மேலும் எந்த மீன் உங்களுக்கு பிடிக்குமா என்ற கேள்விக்கு எனக்கு எல்லா மீனும் பிடிக்கும், மீண்டும் பிடிக்கும் மீம்ஸும் பிடிக்கும் என்று கூறினார். அவரது நகைச்சுவையான இந்த பதில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்