இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா? என திமுக தொண்டர்கள் கேட்பார்கள்: தமிழிசை

வியாழன், 14 டிசம்பர் 2023 (11:41 IST)
வெள்ள நிவாரணத்தொகை மத்திய அரசு அளிக்கவில்லை என கூறிய உதயநிதி அவர்கள் அப்பன் வீட்டுக்கு காசையா கேட்கிறோம், இது தமிழ்நாட்டு மக்கள் வரி செலுத்திய காசு என்று தெரிவித்தார். 
 
இதற்கு பதில் அளித்துள்ள தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இதே கேள்வியை திமுக தொண்டர்களும் கேட்பார்கள் என்றும் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என வாரிசுகளாக திமுக தலைவர்களாகவும், முதல்வராகவும் வந்து கொண்டிருப்பதை அடுத்து இது என்ன உங்கள் அப்பன் வீட்டு கட்சியா என்று கேட்பார்கள் என்றும் தெரிவித்தார். 
 
உதயநிதி முதலில் வாயடக்கம் செய்ய வேண்டும் என்று கூறிய தமிழிசை, ‘கலைஞர் உரிமைத்தொகை என்ற பெயர் வைத்திருந்தீர்களே இது கலைஞர் வீட்டு சொத்தையா கொடுக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி அவரை தமிழ்நாட்டில் வந்து சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்