இந்துக்கள் மீது தூசி பட்டால் காவி புரட்சி வெடிக்கும்: தமிழிசை எச்சரிக்கை

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (09:51 IST)
திமுக உள்பட கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் தமிழகத்தை காவிமயமாக்க இடம் கொடுக்க மாட்டோம் என்று சூளுரைத்து வரும் நிலையில் தமிழகம் ஏற்கனவே காவிமயமாகிவிட்டதாகவும், இந்துக்கள் மீது ஒரு தூசி பட்டால், தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும் என்றும் தமிழிசை செளந்திரராஜன் எச்சரித்துள்ளார்.

 நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாஜக சார்பில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை, அறங்காவலர்கள் எதற்கு காவலர்களாக இருக்கிறார்கள் என தெரியவில்லை. ஆவியை பார்த்து பயப்படும் திராவிட கட்சிகள் காவியை கட்டுப்படுத்த முடியாது.  இந்துக்கள் மீது தூசி பட்டாலும் தமிழகத்தில் காவி புரட்சி வெடிக்கும்' என்று கூறினார்.
 

மேலும் தமிழகத்தை காவிமயம்மாக்க விடமாட்டோம் என்று ஒருசிலர் கூறி வருகின்றனர். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அது ஏற்கனவே தமிழகம் காவிமயமாகிவிட்டது' என்று தமிழிசை ஆவேசத்துடன் கூறினார். தமிழிசையின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் பலர் கிண்டலுடன் கூடிய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்