அரசுப் பேருந்துகளில் இரண்டு விதமானக் கட்டணங்கள் – புதிய முடிவு..

சனி, 8 டிசம்பர் 2018 (09:20 IST)
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வாரநாட்களில் ஒரு கட்டணமும் வார இறுதி நாட்களில் ஒருக் கட்டணமும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.இ.டி.சி. குளிர் சாதன வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட 50 சொகுசுப் பேருந்துகளைப் புதிதாக இயக்கி வருகிறது. இந்த பேருந்துகளில் தனியார் ஆம்னிப் பேருந்துகளை விட அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடம் இருந்து புகார்கள் எழ ஆரம்பித்தன. இதனால் வார இறுதி நாட்களைத் தவிர மற்ற நாட்களில் இந்த பேருந்துகளில் கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. இந்த சொகுசு பேருந்துகளில் இனி வார நாட்களான திங்கள் முதல் வியாழக்கிழமை வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மாறாக, வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டணமே வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணக்குறைப்பு ஏ.சி. பஸ்களில் 10 சதவீதம் அளவுக்கும். படுக்கை வசதிக் கொண்ட ஏ.சி. பேருந்துகளில் கிலோமீட்டருக்கு 20 பைசாவும் சாதாரண படுக்கை வ்சதி கொண்ட பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 10 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்புகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்