அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியை, தமிழாசிரியர் கைது!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:36 IST)
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழ் ஆசிரியரை தட்டிக் கேட்காத தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழாசிரியர் அருள்செல்வன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழாசிரியர் அருள்செல்வன் போக்கை தட்டிக் கேட்காத பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி என்பவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்