ஜனவரி முழுவதும் ‘தமிழ் சங்கமம்’: திமுக எம்பி கனிமொழி

சனி, 31 டிசம்பர் 2022 (14:10 IST)
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை திமுக எம்பி கனிமொழி நடத்தி வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அதிமுக ஆட்சி வந்தவுடன் அந்த நிகழ்ச்சி நடத்தப்பட வில்லை என்ற நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் மீண்டும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
 
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறியபோது தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முழுவதும் விழாக்கோலம் பெறும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
ஜனவரி 13 முதல் 17 வரை திமுக எம்பி கனிமொழி தலைமையில் சென்னை தமிழ் சங்கமம் என்ற நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி கூறியபோது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நம்முடைய பாரம்பரிய கலைஞர்கள் சென்னை வந்து தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்