அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை - எங்கெங்கு தெரியுமா?

செவ்வாய், 1 ஜூன் 2021 (13:06 IST)
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல். 

 
ஆம், தமிழகத்தின் மீது வளிமண்டலத்தில் 3.1 கி.மீ. உயரத்தில் மேகக்கூட்டங்களின் சுழற்சி ஏற்பட்டுள்ளது.  இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
 
இதனையடுத்து, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்