இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (12:55 IST)
இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தின் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 
 
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர், கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம். 
 
இதை தவிர தமிழ்நாட்டின் இதர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்