இந்நிலையில் திருப்புதல் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வினாத்தாள் கசிந்த முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே தற்போதைய தகவலின் படி முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.