அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

Mahendran

வியாழன், 4 செப்டம்பர் 2025 (10:55 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர்களுடன் டெல்லியில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க. மற்றும் அதன் தலைவர்கள் குறித்து பொதுவெளியில் எந்தவித விமர்சனமும் செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். அ.தி.மு.க.வுடனான கூட்டணியை வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர்கள், அ.தி.மு.க. தலைவர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அமித்ஷா அறிவுரை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு, அ.தி.மு.க.வுடனான கூட்டணியை பலப்படுத்தி, இணைந்து செயல்படுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது, கட்சிக்குள் சில அதிருப்திகளை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்