தமிழக அரசின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் உட் கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் இயற்றப்பட்டு வரும் நிலையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக டேப்லெட் கொள்முதல் செய்யப்படும் என்றும் முதல் கட்டமாக 55,478 ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்க இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான கொள்முதல் சார்ந்த பணிகள் பாடநூல் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை துரிதமாக முடித்து ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது கூடுதல் நடவடிக்கையாக ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது