கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்திற்கு 4 லட்சத்து 33 ஆயிரம் கோடி கடன் இருந்தது. ஆனால், இப்போது அது 8 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள், இது 9 லட்சத்து 88 ஆயிரம் கோடியாக உருவாகும் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
கோவையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 2,400 ரூபாய் வீட்டு வரியாக இருந்த நிலையில், அதே வீட்டிற்கு இன்று 56,000 ரூபாய் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்றும், திமுக எம்பி மாநகராட்சி கூட்டத்தில் இதனை கூறியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.