மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்திற்கு பாஜக முதலமைச்சர் பைரோன் சிங் தொடர்பு உள்ளது என்ற ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, மணிப்பூர் முதலமைச்சர் பைரோன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் ராஜ்பவனில் உள்ள கவர்னரிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் முதல்வரின் பதவி விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது பதவி விலகல் குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய போது, பெருகி வரும் மக்கள் அழுத்தம், சுப்ரீம் கோர்ட் விசாரணை, காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆகியவற்றால் தான் மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் ராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவித்தார்.