‘ஆதித்யா எல்-1’ விண்கல திட்ட இயக்குனர் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானியா?

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (10:21 IST)
நாளில் விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனராக தென்காசியை சேர்ந்த பெண் இயக்குனர் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது.  இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் இந்த செயற்கைக்கோளில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
 
இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்றும் சூரியனின் வெப்பநிலை உள்பட பல்வேறு ஆய்வுகளை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல் 1 விண்கலம் திட்ட இயக்குனராக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே  சந்திராயன் 3 விண்கலத்தில் 3 தமிழர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது ஆதித்யா எல் 1 விண்கலத்திலும் தமிழர் பணியாற்றி உள்ளது பெருமைக்குரியதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்