சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மகாகவி பாரதியாரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் பேசியபோது, இந்திய விடுதலைக்காக மட்டும் பாரதியார் போராடவில்லை என்றும் அவரது கனவை இளைஞர்களை காண வைத்தார் என்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பல பாடல்கள் எழுதியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்