முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!

Siva

ஞாயிறு, 5 மே 2024 (08:52 IST)
முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச குழுவை கொண்டு முல்லைப் பெரியாறு அணையை சோதனை நடத்துமாறு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது எனவும் மழைக்காலங்களில் தொடர்ச்சியாகவும் மற்ற நேரங்களில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் மேற்பார்வை குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய குழு எதுவும் தேவை இல்லை என்றும் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேல மழை காலங்களில் தொடர்ச்சியாகவும் மற்ற நேரங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் மேற்பார்வை குழு ஆய்வு செய்து வருகிறது என்று கூறியுள்ள தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய புதிய குழு தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்