சோறு இல்ல; உப்பு தண்ணி தான் குடி தண்ணி: தனித்தீவில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!

புதன், 18 மார்ச் 2020 (09:31 IST)
மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்ற தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தனித்தீவில் தவித்து வருகின்றனர். 
 
கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஈரானுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலுக்காக சென்றுள்ளனர். சுமார் 1000 தமிழக மீனவர்கள் அங்குள்ள தீவுகளில் இருந்தவாரு தொழிலை செய்து வந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஈரானில் கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அநாட்டு அரசு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அதோடு, அங்கு உணவு இல்லாமலும், கடல் நீரை காய்ச்சி குடி நீராக பயன்படுத்தி வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் எங்களை காப்பாற்றும் படி மத்திய அரசிடம் வீடியோ மூலம் கோரிக்கை வைத்தனர். இதில் முதற்கட்டமாக 50 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோரை விரைவில் மீட்கும் படி மீனவர்களின் குடும்பத்தாரும் கோரிக்கை வைத்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்