ஈரானின் செத்து மடியும் மக்கள்: பூதாகரமான கொரோனா!!

செவ்வாய், 10 மார்ச் 2020 (17:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சீனாவில் ஓரளவு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
சீனாவை அடுத்து ஈரான் மற்றும் இத்தாலியில் கொரோனா வைரசினால் ஏற்படும் பலி எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.  கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரானில் இன்று ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஈரானின் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஏப்ரல் மாதம் வரை அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்