தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் இந்த இரண்டு ஊர்களில் இனி நிற்காது: பயணிகள் ஏமாற்றம்

வியாழன், 27 ஜூலை 2023 (07:59 IST)
தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய நகரங்களில் நிற்காது என்பதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
 கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரதமர் மோடி தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் தொடங்கி வைத்த நிலையில் இந்த ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் தினமும் இரவு 9 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்புகிறது. 
 
இந்த ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து கிளம்பி விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, தென்காசி வழியாக மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டையை அடையும். 
 
அதேபோல் மறுமார்க்கமாக திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
 
இந்த ரயில் சிவகங்கையில் நிற்காது என்றும் மானாமதுரையில் கிராசிங்கிற்காக மட்டுமே நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால்  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ள. 
 
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் மட்டுமே இந்த ரயில் நிற்கும் நிலையில் மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நகரங்களில் நிற்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்