வாரம் 3 முறை இயக்கப்படும் தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நேரத்தில் மாற்றம்!

Siva
வியாழன், 3 அக்டோபர் 2024 (08:08 IST)
வாரம் 3 முறை இயக்கப்படும் தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் நேரத்தில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில் (06103) வியாழக்கிழமை, சனிக்கிழமை, திங்கள்கிழமை என வாரத்தில் மூன்று நாள்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ரயில் பயண நேரத்தில் அக்டோபர் 3 அதாவது இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 11.15 சென்றடையும். ஆனால் இனி திருவாரூருக்கு இரவு 10.50 க்கும் சென்றடையும். அங்கிருந்து இரவு 11 மணிக்கும், திருத்துறைப்பூண்டியில் இரவு 11.25க்கும், முத்துப்பேட்டையில் இரவு 11.48 க்கும், அதிராம்பட்டிணத்தில் இரவு 11.59 க்கும், பட்டுக்கோட்டையில் மறுநாள் அதிகாலை (நள்ளிரவு) 12.16 க்கும், காரைக்குடியில் அதிகாலை 2.20 மணிக்கும், சிவகங்கையில் அதிகாலை 3 மணிக்கும், மானாமதுரையில் அதிகாலை 4 மணிக்கும் புறப்படும். அதிகாலை 4.55 மணிக்கு ராமநாதபுரத்திற்கு சென்றடையும். இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்