இனி தாம்பரத்தில் இருந்து இல்லை.. மதுரை செல்லும் ரயில்கள் எங்கிருந்து கிளம்பும்?

Siva

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (08:15 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில நாட்கள் தாம்பரத்திலிருந்து தென்மாவட்ட ரயில்கள் புறப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டு இன்று முதல் வழக்கம் போல் எழும்பூரிலிருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
புதிய நடை மேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் காரணமாக, செப்டம்பர் 11 முதல் தென்மாவட்ட ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட மூன்று விரைவு ரயில்கள் இன்று முதல் வழக்கம் போல் எழும்பூரிலிருந்து புறப்படும்:
 
சென்னை எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
 
சென்னை எழும்பூர் - மதுரை பாண்டி எக்ஸ்பிரஸ்
 
சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ்
 
பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தை திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்