மகளிர் உரிமைத்தொகை: விடுபட்டவர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்: முதல்வர் தகவல்..!

Mahendran

வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:39 IST)
கலைஞர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், இப்போது விண்ணப்பித்தால், தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
 
இந்தத் திட்டம் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
"மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களில் தகுதியான அனைவருக்கும் விரைவில் இந்த உதவி வழங்கப்படும். இதுவரை 1.14 கோடி மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேராதவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பித்தால், அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்."
 
மேலும், "ஜூன் மாதம் 4-வது கட்டமாக 9000 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவை மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க உதவும். இதன் மூலம், தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்," என்று அவர் கூறினார்.
 
இதனுடைய முக்கிய நோக்கம், இந்த திட்டத்தின் மூலம் அனைத்து தகுதியான மகளிரும் வருங்காலத்தில் உறுதி செய்யப்பட்ட உரிமைத்தொகையை பெறுவதாக அமைந்துள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்