நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறும்பொழுது, சிம்புவைத் திருமணம் செய்து கொள்ள பல பெண்கள், குறிப்பாக பல கோடீஸ்வர பெண்கள் போட்டி போடுகிறார்கள்.
சிம்பு தற்போது பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருவதால் இப்போதைக்கு திருமணம் இல்லையாம். கோடீஸ்வர பெண்கள் எல்லாம் தேவையில்லை, என் வீட்டு கோட்டையில் என்னோட வாழத்தான் பெண் தேவை என சிம்பு கூறியதாகவும் டி.ராஜேந்தர் கூறினார். ஆனால் சிம்புவின் காதல் பற்றி கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார்.